Categories
அரசியல்

“நீங்க இதை எடுத்துட்டு போக கூடாது”… அமைச்சர் பிடிஆருக்கு… சென்னை ஏர்போர்ட்டில் நேர்ந்த அவமானம்…!!!!

மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேலை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தனது உடமைகளுடன் 2 மடிக்கணினி கொண்டு வந்த பொழுது சிஐஎஸ்எஃப் உதவி ஆய்வாளர் ஒருவர் தடுத்து நிறுத்தியதுடன் 2 மடிக்கணினிகளை எடுத்து செல்ல அனுமதி அளிக்க முடியாது என கூறியுள்ளார். இதனால்  2 மடிக்கணினிகளை கொண்டு செல்ல கூடாது என்ற கட்டுப்பாடு ஏதும் விதிக்கவில்லை என்று அதிகாரியிடம் அமைச்சர் கோபமாக கூறியுள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நிலவியது. அப்பொழுது அவர் நான் இந்த மாநிலத்தின் நிதியமைச்சர் என்று கூறியுள்ளார். பின்னர் இதனை அறிந்த மேலதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் தடுத்து நிறுத்திய அந்த பாதுகாப்பு படை அதிகாரியும் அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதனையடுத்து வாக்குவாதத்திற்கு காரணமான 2 மடிக்கணினியுடன் தூத்துக்குடிக்கு தனது பயணத்தை மேற்கொண்டார்.

Categories

Tech |