கொரோனா ஊராடங்கால் அலுவலக பயன்பாடுகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததால், பலர் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து பொருளாதாரம் இன்றி தவித்து வந்தனர். அதேபோல்,
கொரோனா ஊரடங்கு காரணமாக பல அலுவலகங்கள் பெரிய அளவில் இழப்புகளை சந்தித்தன. இதனால், அலுவலக விரிவாக்கப் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக நில உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சென்னை உட்பட ஏழு முக்கிய நகரங்களில் ஜூலை முதல் செப்டம்பர் வரை அலுவலக பயன்பாட்டுக்கான இடங்கள் குத்தகைக்கு விடும் நடவடிக்கைகள் 50 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.