Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க இந்த வருடத்தில் தேர்வு எழுதியவரா..? அப்போ இதை உடனே பண்ணிருங்க… உதவி இயக்குனர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் தேர்வுகள் துறை உதவி இயக்குனர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 2014-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டு வரை பத்தாம் வகுப்பு சிவகங்கை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட தனி தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு அந்தந்த தேர்தல் மையம் மூலம் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. இதில் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்கு திரும்பவும் இந்த அலுவலகத்திற்கு சான்றிதழ் வந்துள்ளது. அத்துடன் மதிப்பெண் சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பப்பட்ட 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பதிவுகள் ஆகியவைகளும் இந்த அலுவலகத்திலேயே உள்ளது. இரண்டு வருடங்கள் கழித்து பெறப்படாத சான்றிதழ்களை தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வுகள் முடிவடைந்தவுடன் அழிக்கப்படல் வேண்டும்.

எனவே மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள் மேலே குறிப்பிட்ட வருடங்களுக்கான அறிவிப்பின்படி 20 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் செயல்படும் இந்த அலுவலகத்தில் வேலை நேரத்தில் நேரில் அணுகலாம். மேலும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின் ஜெராக்ஸ் நகலை இணைத்து அலுவலகத்திற்கு அனுப்பியோ அல்லது ரூ. 45 மதிப்புள்ள தபால்தலை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதப்பட்ட உரையுடன் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் அனுப்பியோ பெற்றுக்கொள்ளலாம்.மேற்படி மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி பெற தவறினால் அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |