Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நீங்க இன்னும் புதுப்பிக்கலையா?…. மார்ச் 1 கடைசி தேதி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடந்த 2014 to 20 19 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புது புதுப்பிதற்கான மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புது’ப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் வருகின்ற மார்ச் 1-ஆம் தேதிக்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இணையதளம் வாயிலாக தங்களது பழைய பதிவினைப் புதுபிக்க விரும்புபவர்கள் https// tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் இணையத்தளத்தில் பதிவு செய்ய தெரியாதவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |