பயனாளர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லாடனேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வைத்து நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவாப் பப்ளிசிட்டீஸ் தலைவர் புவனேந்திரன், சங்க செயலாளர் செல்வம், நிர்வாகிகள், பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சிவகங்கை கோவாப் பப்ளிசிட்டீஸ் தலைவர் புவனேந்திரன் நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.