பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என 4 பேர் இருக்கும் நிலையில், அப்பா தினந்தோறும் 2 சாக்லேட் வாங்கி வருவார். இதில் அப்பா வாங்கி வரும் சாக்லேட்டை தங்கச்சி உடனே சாப்பிட அண்ணன் மட்டும் ஒளிச்சு வச்சு சாப்பிடுவான். ஒரு நாள் தங்கை அண்ணனிடம் சென்று அன்புனா என்ன என்று கேட்கிறாள். அதற்கு அண்ணன் நீ எடுப்ப என்று தெரிஞ்சும் நான் தினந்தோறும் அதே இடத்தில் சாக்லேட்டை வைக்கிறேன் அல்லவா அதுதான் அன்பு என்று கூறினார். அன்பு மட்டும் தான் உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரே ஆயுதம். அதில் ஒன்று உறவுகள். மற்றொன்று நண்பர்கள்.
ரசிகர்களின் அன்பே என்னுடைய மிகப்பெரிய போதை. அன்பு என்பது தான் உலகின் மிகப்பெரிய ஆயுதம் என்று கூறினார். இந்நிலையில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியை ரசிகர்கள் அவருக்கே தற்போது கூறி வருகிறார்கள். அதாவது நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாக தன்னுடைய தந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் இதனால் தான் ரசிகர்கள் நடிகர் விஜயிடம் நீங்கள் சொன்ன அன்பை முதலில் உங்களுடைய பெற்றோர்களிடம் காண்பியுங்கள் என்று கூறி வருகிறார்கள்.