ஈரோடு மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமமே பாஜகவில் இணைந்துள்ளது.
தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற கட்சிகளாக திகழ்வது ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. தமிழகத்தின் பல கிராமங்களில் இந்து கடவுள்களை புனிதமாக மதித்துப் போற்றக்கூடிய மக்கள்தான் பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதை திமுக சிறிதளவு கூட கண்டிக்கவில்லை என்றும்,
அதிமுக அரசும் பெரிதளவு கண்டுகொள்ளவில்லை எனவும் விரக்தியடைந்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 70 குடும்பங்கள், தங்களை பாஜகாவில் இணைத்துக் கொண்டனர். இதில் தங்களை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டவர்களில் பலர், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.