Categories
மாநில செய்திகள்

நீங்க எங்க ஓட்டு போடணும்…. இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி விவரங்களை அறிய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, http:/ / election.chennaicorporation.gov.in  என்ற இணையதளத்தில் சென்று Know Your Zone and Division இணைப்பில் மண்டலங்கள் மற்றும் வார்டுகளின் அமைவிடங்களை தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து Know Your Polling Station சென்று வோட்டர் ஐடி எண்ணை பதிவு செய்தால் அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |