Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

நீங்க எந்த மாவட்டம் ? அப்ப உஷாரா இருங்க….! இடியோடு கூடிய கனமழை இருக்கு….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்து வரக்கூடிய ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தில் பார்த்தோம் என்றால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

அதே போல வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நேற்றைய தினம் சென்னையில் மாலையில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் கனமழை இருந்து. சென்னையை பொருத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில்  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய மாவட்டங்களில் மட்டும்தான் மழையை பெறும். உள் மாவட்டங்களில் ஒரு சில  இடங்களில் மழை பெய்யும். வட கடலோர மட்டும் எப்போதாவது மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பார்த்தோமென்றால் மேற்குத் தொடர்ச்சி  மலையில் மழையில் இருந்தாலும்கூட உள் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களையும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் சின்னக்கல்லார்பகுதியில் ஏழு செண்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. செங்கல்பட்டு மகாபலிபுரத்தில் 6 சென்டி மீட்டர் மழையும்,  சேந்தமங்கலம், வேதாரணியம் போன்ற இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 3 நாட்களாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி அதனை ஒட்டி இருக்கக் கூடிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வந்த நிலையில் அடுத்து வரக்கூடிய நான்கு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |