பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனித்துவமான குணங்களை கொண்டவர்களாக இருப்பர். 100% யாரும் யாருடனும் ஒத்துப் போவதில்லை. அதேபோன்று ஒருவரது நடவடிக்கை மற்றும் அடுத்தவர்கள் நடவடிக்கை போல் இருக்காது. அவ்வகையில் நீங்கள் பிறந்த தினத்தை வைத்து உங்களின் குணம் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.
ஞாயிற்றுக்கிழமை
எதையும் பாசிட்டிவாக யோசிப்பவர்கள். தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். எளிதில் சோர்வடைந்து போவீர்கள். இதனால் நீங்கள் வகுத்து வைத்த திட்டங்கள் நிறைவேறாமல் பாதியிலேயே நின்றுவிடும். அதிகமாக உணர்ச்சி வசப்படும் நீங்கள் மற்றவர்கள் கூறும் கருத்துக்களை மனதில் ஏற்றி அதற்கேற்றபடி வாழ முயற்சிப்பீர்கள். மனதில் குழப்பம் இருப்பதால் மற்றவர்களிடம் பழகுவதற்கு காலதாமதம் ஆகும்.
திங்கள்கிழமை
நீங்கள் வித்தியாசமாக யோசிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஆனால் உங்களது வித்தியாசமான யோசனைகளை மனதிலேயே வைத்துக் கொள்ளும் நபர். நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் செய்யத் தொடங்கினால் அதில் சிறந்த தலைவராக உங்களால் திகழ முடியும்.
செவ்வாய்கிழமை
புத்துணர்ச்சி நிறைந்த நபராக நீங்கள் இருப்பீர்கள். உங்களால் ஏராளமானோர் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் முடிந்த உதவியை உங்களுக்கு செய்ய முன்வருவார்கள். சில சமயங்களில் அளவுக்கு அதிகமாக சிந்தித்து அதனை கட்டுப்படுத்த முடியாமல் துன்பப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை நீங்கள் விரும்பினாலும் பணத்தை மிச்சம் பிடிப்பது சவாலான ஒன்றாகவே உங்களுக்கு அமையும். நீங்கள் நேர்மையாக இருந்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்ள பயம் கொள்வீர்கள்.
புதன்கிழமை
புதிய விஷயங்களை மிகவும் வேகமாக கற்றுக் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள். உங்களைப் போன்று இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு சூழ்நிலைகளை நிதானமாக கையாளுவீர்கள். அனைவருடனும் ஒன்றுபோல் பழகுவீர்கள். உங்கள் பணியையும் சக பணியாளர்களையும் அதிகமாக நேசிக்கும் உள்ளம் கொண்டவர்கள். அடுத்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் அவர்களுடன் பழகுவதற்கும் விருப்பம் கொள்வீர்கள். நீங்கள் பேரதிஷ்டம் கொண்டவர்கள் என்று சொல்லலாம்.
வியாழன்கிழமை
மரியாதை தேவை என்றால் மரியாதை கொடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதி உங்களுக்குள் இருக்கும். வெளியில் சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள். உங்களிடம் தலைமைப் பண்பு சாதாரணமாகவே இருக்கும். எதிலும் முதலிடத்தை பெற கடுமையாக உழைப்பீர்கள். உங்களை விமர்சிப்பவர்களை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். மிகவும் எளிதாக உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். உங்களிடம் இயற்கையாகவே இருக்கும் கவர்ச்சி பலரை எளிதாக கவர்ந்து விடும்.
வெள்ளிக்கிழமை
நீங்கள் சிறந்த படைப்பாளி. உறவுகள் என்று வந்து விட்டால் எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுவீர்கள். இயற்கையாகவே அதிக ஆன்மீக உணர்வு உங்களுக்கு இருக்கும். புத்திசாலியாக இருந்தாலும் உங்கள் ஆன்மா பழையதை அதிகமாக நேசிக்கும். உங்களது வாழ்வில் ஏற்படும் பின்னடைவுகளை சமாளிக்க தடுமாறுவீர்கள். நீங்கள் சிறந்த உள்ளுணர்வு கொண்டவர்.
சனிக்கிழமை
மற்றவர்களின் நம்பகத்தன்மையை அதிகமாகப் பெற்றவர்கள். நீங்கள் நிகழ்காலத்தை வெட்டு எதிர்காலத்திலோ அல்லது கடந்த காலத்திலோ வாழ்வதற்கு விரும்புவீர்கள். நீங்கள் புத்திசாலியாக இருந்தாலும் சிறந்த நபராக இருக்க ஏராளமான முயற்சிகளை முன்னெடுப்பீர்கள். இயற்கையாகவே மனதில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் அது மற்றவர்களுக்கு பார்வைக்கு முட்டாள்தனமாக தோன்றும். சிலர் உங்களிடம் கருத்து கேட்கும் போது எதிர்மறையான பதில்களை கூறுவீர்கள். பெருமிதமான தோற்றத்துடன் இருப்பீர்கள். எனவே நீண்ட நேரத்தை அழகாக காட்சியளிக்க எடுத்துக் கொள்வீர்கள்.