தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. அதனால் தான் சென்னையில் இவ்வளவு தண்ணீர் தேங்கி நிக்கின்றது என்ற கேள்வி குறித்து பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு,
நான் கேட்கிறேன்… நீங்க எங்கள கேள்வி கேட்காமல், பத்து வருஷம் ஆட்சியில் இருந்து தண்ணீர் நிக்குது, அவரை கேள்வி கேளுங்க. நீங்க என்ன பண்ணுனீங்க என்று கேட்கணும். நாங்க வந்து ஆறு மாதம் தான் ஆகிறது. 2700 கிலோ மீட்டர் இந்த வாய்க்கால் இருக்கிறது. 771 கிலோ மீட்டர் தூர்வாறிவிட்டோம். அப்படி தூர்வாரியதால் தான் ஓரளவுக்கு தண்ணீர் வடிந்தது. நீங்க ஏற்கனவே எந்தெந்த இடத்தில் இருந்து தண்ணீர் வடிய வேண்டும் என்று உள்ளூரில் இருக்கின்ற அமைச்சர்களுக்கு நல்லா தெரியும்.
ஆனால் அவர்கள் பத்து வருஷம் பாக்கல.இதை செய்யாத காரணத்தினால் தான் இப்போது தண்ணீர் வடியாமல் இருக்கிறது. இந்த ஆண்டு முதல் அமைச்சர் சொல்லியிருக்கிறார், அனைத்தையும் சரி செய்வார் என்று சொல்லி இருக்கிறார், செய்யப்படும். அவங்க சொல்லுவாங்க… ஆயிரம் சொல்வாங்க, ஆயிரம் கோடி கொடுத்தேன், 2000 கோடி கொடுத்தேன் என்று… எங்கு செய்திருக்கிறார்கள் ? அதுதான் தீவிரமாக விசாரிக்கப்படும் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.