Categories
தேசிய செய்திகள்

நீங்க ஒன்னும் செய்ய வேண்டா… நாங்களே பார்த்துப்போம்… கெட்டிக்கார சிறுவர்கள் செய்த வேலையைப் பாருங்க…!!!

அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சிறுவர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தில் பக்மாரா என்ற கிராமம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக சாலை சீரமைக்க படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளை ஒன்றிணைந்து சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தவறுகளையும் அலட்சியங்களையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே இந்த சிறுவர்களின் செயல் சமூகத்தின்மீது ஒவ்வொருவரும் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

சிறுவர்கள் சாலையை சரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலைப் பணியை அதிகாரிகள் நிறைவு செய்யாமல் பாதியில் விட்டது உண்மையாக இருப்பின், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அதிகாரி உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |