Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீங்க ஒரிஜினலா இருங்க’… மாஸ்டர் பட நடிகரின் வைரல் டுவீட்…!!!

மாஸ்டர் பட நடிகர் மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த மகேந்திரன் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் . மாஸ்டர் படத்தில் பத்து நிமிடங்கள் மட்டுமே இவர் நடித்த காட்சிகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்குப் பிறகு மகேந்திரனுக்கு கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘D43’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘நீங்கள் அசலாக இருங்கள். உலகம் உங்களை நகலெடுக்கட்டும்’ என பதிவிட்டு தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |