Categories
அரசியல்

இனி எல்லா ஓட்டும் விஜய் மக்கள் இயக்கத்துக்குத் தான்…. திமுகவை பயமுறுத்தும் வாக்காளர்கள்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் மூன்றாவது கட்சியாக உள்ள மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதேபோல பாஜகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேச்சையாக போட்டியிட்ட 169 வேட்பாளர்களின் 110 பேர் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெறும் விஜய் பெயரை மட்டுமே பயன்படுத்தி தேர்தலில் நின்ற சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானவர்கள் வெற்றி பெற்றுள்ளது சம்பவம் மற்ற அரசியல் கட்சியின் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் பெற்ற வெற்றியை சுட்டிக்காட்டும் ஒரு சிலர் வரும் நாட்களில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு செய்யத் தவறினால் அடுத்த தேர்தலில் திமுக ஓட்டுகள் அனைத்தும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு செல்லும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிமுக, திமுகவிற்கு மக்கள் இதுவரை மாறி மாறி வாக்கு அளித்து வந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் பி பிளானாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் அதிகாரப் பூர்வமாக இருக்க வேண்டும் என்று தேவையில்லை என்றும், விஜய் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே போதும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |