இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தில் மானிய விலையில் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சிலிண்டர் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சிலிண்டர் விலை உடன் சேர்த்து டெலிவரி கட்டணமும் சேருவதால் சிலிண்டரின் விலை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் வெவ்வேறு முறையில் சிலிண்டர் உபயோக ஊழியர்களுக்கு டெலிவரி கட்டணம் வழங்குகின்றனர். ஆனால் உண்மையிலேயே சிலிண்டர் டெலிவரி தனி கட்டணம் என்பது எதுவும் கிடையாது. சிலிண்டர் விலை உடன் டெலிவரி கட்டணமும் உள்ளடங்கிவிடும். சிலிண்டர் கட்டணத்தை தவிர நாம் கூடுதலாக செலுத்தக்கூடிய பணம் விருப்பப்பட்டு கொடுக்கும் டிப்ஸ் தான். அது ஒன்றும் கட்டாயம் கிடையாது.
ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே டெலிவரிக்கு கட்டணம் எதுவும் கிடையாது. அதற்கு மேல் டெலிவரிக்கு 30 ரூபாய் மட்டுமே டெலிவரி கட்டணம். ஆனால் இது வாடிக்கையாளர்களுக்கு தெரியாது என்பதால் ஊழியர்கள் 100 ரூபாய் வரை கட்டணம் பெறுகின்றனர். இதுதவிர டெலிவரியை இல்லாமல் நாமாக சென்ற சிலிண்டரை பெற்றுக் கொண்டால் டெலிவரி கட்டணம் எதுவும் கிடையாது.