Categories
மாநில செய்திகள்

நீங்க கைது செய்தாலும் பரவாயில்ல… நாங்க அப்படித்தான் செய்வோம்…. வேல் யாத்திரையில் மீண்டும் எல். முருகன் கைது…!!!

வேல் யாத்திரையை மீண்டும் தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரையில் நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வரையில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால் கடந்த 6 ஆம் தேதி தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் திருத்தணியில் தடுத்து நிறுத்தி, கைது செய்து பிறகு விடுவித்தனர். அப்போது தமிழக பாஜக தலைவர் தடையை மீறி தமிழகம் முழுவதிலும் வேல் யாத்திரை நடக்கும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் இன்று இரண்டாவது நாளாக வேல் யாத்திரை நடந்தது. அவ்வாறு சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு வரையில் யாத்திரை தொடங்க இருந்தது. ஆனால் யாத்திரை தொடங்குவதற்கு முன்னதாக தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலரை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |