Categories
மாநில செய்திகள்

நீங்க சரியாக வாக்கு செலுத்தி இருக்கிறீர்களா?… எப்படி தெரிந்து கொள்வது…!!!

நீங்கள் சரியாக வாக்கு செலுத்தி இருக்கிறீர்களா என தெரிந்துகொள்ள விவிபாட் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.

அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் செல்வாக்கு செலுத்திய பிறகே விவிபாட் இயந்திரத்தில் உங்களின் வேட்பாளர் பெயர், வரிசை எண், சின்னம் 7 வினாடிகள் தோன்றும். நீங்கள் வாழ்க்கை சரியாக செலுத்தி இருக்கிறீர்களா என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் புதிதில்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |