Categories
தேசிய செய்திகள்

“நீங்க சாப்பிட்ட தட்டை நாங்க தொட மாட்டோம்”… நீயே கழுவு… உ.பி பள்ளியில் அரங்கேறிய கொடூரம்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் தலித் மாணவர்கள் பயன்படுத்திய தட்டை அவர்களையே கழுவ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மைன்புறி மாவட்டத்திலுள்ள தாராப்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 60 மாணவர்கள் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சாப்பிடும் மாணவர்களில் பட்டியலின மாணவர்கள் 60 பேரை மட்டும் அவர்கள் சாப்பிட்ட தட்டை அவர்களையே கழுவுமாறு நிர்பந்த படுத்தியதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜபுத்தை இடைநீக்கம் செய்தனர். தொடர்ந்து விசாரணையில் பள்ளியில் வேலை செய்யும் சமையல்காரர்கள் சேர்மாவதி மற்றும் லக்ஷ்மி தேவி இருவரும் பட்டியலின மாணவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களை கழுவ மாட்டோம். என்று கூறி மாணவர்களையே கழுவ வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சாதியைக் கொண்டு பணியாற்றிய இருவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |