Categories
தேசிய செய்திகள்

நீங்க சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?… அரசு அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்பட்டால் சிலிண்டர் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதனையடுத்து 2015ஆம் ஆண்டு முதல் சிலிண்டருக்கான மானியம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது 2015ஆம் ஆண்டு ஒரு சிலிண்டர் விலை ரூ.998 ஆக இருந்த நிலையில், ரூ.563 மானியமாக வழங்கப்பட்டது. சந்தை விலை கொடி செய்வதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதற்கான மானியம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மானியம் ரத்து செய்யப்பட்டால் மக்கள் கூடுதல் விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தச் செய்தி பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |