Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க சொத்துவரி செலுத்தீட்டிங்களா?…. இன்று சிறப்பு முகாம்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் வரி திருத்தம் செய்யப்பட்ட கோப்புகள் சரி செய்யப்பட்டு வருவதால் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நவம்பர் 17ஆம் தேதி அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு செலுத்தாமல் உள்ள வரிகளை செலுத்தலாம் எனவும் வரிபாக்கி வைத்திருந்தால் மேல் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |