Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீங்க சொன்னா நான் விட்டுடறேன்’… ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய யுவன் சங்கர் ராஜா…!!!

யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் யுவனின் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தில் யுவன் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது யுவன் சங்கர் ராஜா மாநாடு, வலிமை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பதிவு

இந்நிலையில் நேற்று யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகையிலை விழிப்புணர்வு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ‘நீங்கள் புகைப்பிடிப்பதால் உங்களுடைய உடம்பில் மெதுவாக விஷத்தை ஏற்றிக் கொள்வதோடு உங்களை சூழ்ந்து இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். இதனால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதில் ஒரு ரசிகர் ‘ஓகே நீங்க ஒரு ஹாய் சொன்னா சிகரெட் பிடிப்பதை விட்டு விடுகிறேன்’ என பதிவிட்டுள்ளார். அதற்கு உடனே யுவன் ‘ஹாய்’ என பதிலளித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |