கோவை தெற்கு பகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் என்ன நடந்தாலும் அதனை அரசியலாக மாற்ற ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறவில்லையா? வேளாண் சட்டங்களை திரும்ப பெற விவசாயிகள் நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ள நிலையில் நீதிமன்றத்தையும், பாராளுமன்றத்தையும் விவசாயிகள் மதிக்கவில்லை.
பாஜக ஆட்சியில் உள்ள யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சி நிச்சயம் அவர்களை ஒருபோதும் பாதுகாக்காது. உத்தரபிரதேசம் சம்பவத்தில் அம்மாநில காவல்துறையினர் குற்றம் செய்தவர்கள் யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உள்துறை இணை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதலில் உண்மையை நிரூபிக்கப்படும். அதன்பின் பதவி விலக கோரலாம் என்று கூறியுள்ளார்.