பல முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களைப் போல, ஜியோவும், தனது வாடிக்கையாளர்களுக்கு அவசரகால டேட்டா கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஜியோ சிம்கார்டை பயன்படுத்துகின்றனர். இன்னிலையில் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்னவென்றால், தனது வாடிக்கையாளர்களுக்கு அவசரகால டேட்டா கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அன்றைய நாளின் டேட்டா காலியாகிவிட்டால், உடனடியாக ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில், தற்போது ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள், பிறகு கட்டணத்தை செலுத்துங்கள் என்ற வசதியை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் மூலம் ப்ரீபெய்டு பயனாளர்கள் 11 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜிபி கொண்ட அவசர டேட்டா கடன் திட்டத்தை அதிகபட்சமாக 5 முறை பெற்றுக் கொள்ளலாம்.ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான சேவையை தரும் வகையில், அண்மையில், அதன் தொலைத்தொடர்புகளை இரண்டு மடங்காக அதிகரித்து, டேட்டா திறன் மற்றும் வேகத்தை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.