மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தற்போது தான் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன.. இந்த நிலையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாத ஆசிரியர்கள் பிறர் நலன் கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என்று கூறியது.
மேலும் 2 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், பிற்காலத்தில் மாற்று கூட வரலாம். மாணவர்களின் நலன் கருதியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே பொது நலனுக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.