Categories
அரசியல்

நீங்க தப்பு பண்ணிட்டீங்க!…. “திமுக தான் வின்னர்”…. கடும் அதிர்ச்சியில் அதிமுகவினர்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவையும் தாக்கல் செய்து வந்தனர். அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சி 7-வது வார்டில் அதிமுக சார்பில் சோமசுந்தர பாண்டியன் என்ற வேட்பாளரும், திமுக சார்பில் பிரவீன் தங்கம் என்ற வேட்பாளரும் தேர்தலுக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

பின்னர் தங்களுடைய வேட்புமனுவை இருவரும் தாக்கல் செய்திருந்தனர். இன்று அந்த வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது வேட்புமனுவில் அதிமுக வேட்பாளர் சோம சுந்தர பாண்டியன் பல இடங்களில் தவறாக பூர்த்தி செய்திருந்ததால் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராமநாதபுரம் நகராட்சி தேர்தல் அலுவலர் சந்திரா, திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம் வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளார். அதனைக் கேட்ட திமுகவினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ஆனால் மறுபக்கம் அதிமுகவினரோ வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ளனர். இதனால் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |