காலை உணவை நேரம் தவறி சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
ஆனால் அவ்வாறு சாப்பிடும் உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. அவ்வாறு நேரம் தவறி உணவு சாப்பிடுவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன்படி காலை உணவை 8.30 மணிக்குப் பிறகு எடுப்பது வழக்கமாக இருந்தால் டைப்-2 நீரிழிவு நோய் வாய்ப்பு அதிகம் என்று என்டோகிரைன் சொசைடி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் உணவு எடுக்காமல் இருந்தால் தேவையற்ற நேரங்களில் உணவை எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் இன்சுலின் எதிர்ப்பு அதிகரிப்பதை ஆய்வில் கண்டு பிடித்துள்ளது. மேலும் ஆரோக்கியமான உணவை சரியான அளவில் மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.