இன்றைய காலகட்டத்தில் அனைவருமே பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களை பயன்படுத்த தொடங்கி விட்டன. ஆனால் ஒரு சில சமயங்களில் எட்டிய மையங்களில் பணம் எடுக்கும்போது கிழிந்த நோட்டுகள் வந்துவிடும். அதனால் சிக்கல் நேரிடும். கிழிந்த நோட்டுக்களால் எந்த பயனும் கிடையாது. இப்படியான சூழலில் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனை நீங்கள் நல்ல நோட்டாக மாற்றிக் கொள்ள முடியும்.
அதாவது ஏடிஎம்களில் சிதைந்து அல்லது கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் அதனை மாற்றுவதற்கு எந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கப்பட்டதோ அந்த வங்கியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதாவது விண்ணப்பத்தில் ஏடிஎம் இல் பணம் எடுத்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு பணம் எடுத்த ரசீதை இணைத்து கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டிற்கு மாறாக நல்ல ரூபாய் நோட்டு கிடைக்கும்.
இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,எங்கள் ஏடிஎம் களில் வைக்கப்படுவதற்கு முன்பு நோட்டுகள் அதிநவீன வரிசைப்படுத்தும் இயந்திரங்கள் மூலமாக சரிபார்க்கப்படுகின்றன. எனவே கிழிந்த நோட்டுகள் விநியோகிக்க வாய்ப்பு கிடையாது. இருந்தாலும் எங்களின் எந்த கிளைகளிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். மேலும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி கிழிந்த ரூபாய் நோட்டுக்களை சம்பந்தப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளலாம்.