Categories
சினிமா

“நீங்க பொறுப்பாக நடந்துகொள்ளணும்”…. ரஜினிக்கு அட்வைஸ் கூறிய ஜெகதீசன் ஆணையம்….!!!!!

தூத்துக்குடியில் சென்ற 2018ஆம் வருடம் மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது விசாரணையை முடித்து 3,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்பித்தது.

அதுமட்டுமின்றி சட்டப்பேரவையிலும் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல விவகாரங்கள் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேசன், தென் மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ், தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் உட்பட 17 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்ற 2018ம் வருடம் தூத்துக்குடி சென்று இருந்தார்.

அதன்பின் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூகவிரோதிகளே காரணம் என்று தெரிவித்திருந்தார். இக்கருத்து தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் சார்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினி “ஸ்டெர்லைட் ஆலை வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம்.

எனினும் அப்படி எந்த சமூகவிரோதியையும் எனக்குத் தெரியாது” என கூறினார். இந்த கருத்து தொடர்பாக இப்போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டாகியது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினி போன்ற பிரபலமானவர் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது சொல்லும் தகவலின் ஆதாரத்தை உறுதிசெய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |