Categories
தேசிய செய்திகள்

நீங்க மட்டும்தான் குடிப்பீங்களா நாங்களும் குடிப்போம்! வொயின்ஷாப்பில் பீரை அலேக்காக குடித்து குரங்கு செய்த அட்டகாசம்….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு குரங்கு மதுபானக் கடைகளுக்குள் புகுந்து மது பாட்டில்களை திருடுவதாக மதுப் பிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரேபரேலி மாவட்டத்தில் அச்சல்கஞ்ச் பகுதியில் செயல்பட்டுவரும் மதுபானக்கடையில், மதுவைத் திருடிக்குடிப்பதை அந்த குரங்கு வாடிக்கையாக வைத்து இருப்பதாகவும், துரத்தி சென்றால் கடித்துக் குதறுவதாகவும் மதுப் பிரியர்களும், கடைக்காரர்களும் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கடைக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பல இடங்களில் குரங்குகள் கடைகளுக்குள் நுழைந்து தொல்லை செய்வதும், உணவுப் பொருட்களை தூக்கிச்செல்வதும் வழக்கமான ஒன்றுதான். எனினும் இந்த குரங்கு மதுகுடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வீடியோவில் அந்த குரங்கு ஒரு பாட்டிலிலுள்ள பீரை ரசித்துகுடிக்கும் காட்சிகளானது பதிவாகியிருக்கிறது. வனத்துறையினரின் உதவியுடன் இந்த குரங்கை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மாவட்ட கலால் அலுவலர் ராஜேந்திர பிரதாப் சிங், விரைவில் வாடிக்கையாளர்கள் இப்பிரச்சினையில் இருந்து விடுபடுவார்கள் என கூறினார்.

Categories

Tech |