அரசு பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து வகுப்பறையில் குரங்கும் பாடம் படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரி பாக் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை குரங்குகள் கவனித்து வருகின்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை. மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழையும் குரங்கு பின் வரிசையில் சாதாரணமாக சென்று அமர்கிறது. அதை பொருட்படுத்தாமல் அந்த வகுப்பு ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் .
'स्कूल चले हम' वानराला लागली शिक्षणाची गोडी#ViralVideo #trending pic.twitter.com/v5Rkc2pAP8
— News18Lokmat (@News18lokmat) September 14, 2022
அரசு பள்ளி மாணவர்களுடன் காட்டு லங்கூர் பாடம் படிக்கின்றது என்ற தலைப்பில் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் முன் வரிசையில் குரங்கு அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் இணையத்தில் வைரலானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குரங்குகள் மொபைல் போனை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல லட்சம் லைக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.