Categories
தேசிய செய்திகள்

நீங்க மயானத்திற்கு வரக்கூடாது?… தலித் அமைப்பினருக்கு எதிர்ப்பு…. சாலையோரத்தில் மூதாட்டி உடலை அடக்கம் செய்த அவலம்….!!!!

துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் பிஜ்வாரா கிராமத்தில் 100க்கும் அதிகமான தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்திலுள்ள மயானத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் அங்கு அடக்கம் செய்ய மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தலித் சமூகத்தை சேர்ந்த ஹனுமக்கா(75) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துசென்றனர்.

அப்போது மற்றொரு பிரிவினர் ஹனுமக்காவின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக வேறுவழியின்றி சாலை ஓரமாக ஹனுமக்காவின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தலித் பிரிவினரை சேர்ந்தவர்கள் கூறியதாவது “கர்நாடக மாநிலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் தலித் சமூகத்திற்கு தனியாக மயானம் இல்லை.

இதன் காரணமாக எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழக்கும்போது அவர்களது உடல்களை அடக்கம் செய்ய கடும் சிரமத்தை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. இதற்கிடையில் துமகூரு மாவட்டத்தில் மட்டும் 200 கிராமங்களில் தலித்சமூகத்திற்கு தனியாக மயானம் இல்லை” என கூறினர். இச்சம்பவம் பற்றி கர்நாடக சட்டத்துறை மந்திரி மாதுசாமி கூறியிருப்பதாவது, அந்த கிராமத்தில் தலித் சமூகத்தினருக்கு தனியாக மயானம் அமைப்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்” என்று கூறினார்.

Categories

Tech |