Categories
மாநில செய்திகள்

நீங்க மின் கட்டணம் செலுத்தனும்…. இந்த லிங்கை கிளிக் செய்யுங்க…. வாட்ஸ்அப்பில் மெசேஜால் விபரீதம்….!!!!

கோவை கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், இன்று இரவுக்குள் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், மேலும் மின் கட்டணத்தை செலுத்த கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் பதற்றம் அடைந்த நடராஜன், உடனடியாக அந்த லிங்கை கிளிக் செய்து, தனது வங்கி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தார். பின்னர் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த கணக்கிற்கு ரூ.10 செலுத்தினார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்து 7 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மக்களுக்கு தொடர்ந்து தனிநபர் செல்போன் எண்ணில் இருந்தோ அல்லது யாராவது உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை கேட்டாலோ கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையிலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. எந்த ஒரு வங்கியும், அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தனிநபருக்கு செல்போன்கள் மூலமாக பணத்தை அனுப்பும்படி கூறுவதில்லை. எனவே மக்கள் அதனை புரிந்து கொண்டு இது போன்று லிங்கை கிளிக் செய்யும்படி தெரிவித்தால் அதனை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories

Tech |