நடிகை லட்சுமி மேனன் சமூக வலைத்தள பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் லட்சுமி மேனன். இதைத் தொடர்ந்து இவர் சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், குட்டிப்புலி, கொம்பன், மிருதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன் பின் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
பொங்கலுக்கு நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். இதற்கு ‘ஆமாம்’ என லட்சுமி மேனன் கூறியுள்ளார். இதேபோல் மற்றொரு ரசிகரின் கேள்விக்கு ‘நான் எப்போதும் சிங்கிள் கிடையாது’ என லட்சுமி மேனன் கூறியுள்ளார்.