தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு தற்போது கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில், இன்று திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு பல பாசிடிவ் ஆன விமர்சனங்களை குவிந்த வண்ணமாக இருக்கிறது.
அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவ்ர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பை பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நீங்க ராக் பண்ணிட்டீங்க தம்பி. ரொம்ப பெருமையா இருக்கு. மாஸ். மக்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்று பதிவிட்டுள்ளார்.