சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் நேரில் சந்தித்து நன்றி கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேசிய அளவில் உள்ள எஸ்சி, எஸ்டி ஆணையம் போல மாநில அளவிலும் அமைப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். சசிகலா அம்மா நினைவிடம் செல்வது, தீவிர அரசியலில் ஈடுபடுவது என்பது அவருடைய தனிப்பட்ட விவகாரம்.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சனம் செய்யாது. இப்போது அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்கத்தக்கது. அதிமுகவை தற்போது கைப்பற்ற நினைப்பது என்ற முடிவு காலம் தாழ்ந்த முடிவாகும். பழைய வீரியத்தோடு அதிமுகவை மீண்டும் கைப்பற்ற முடியுமா? என்பது கேள்விக்குறிதான். பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்ததும் தவறான முடிவு என்று கூறியுள்ளார்.