Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்களா…?” பனை வெல்லத்தோடு இத சேர்த்து சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது.

காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவுகிறது.

பித்தம் வாந்தி காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து பருகலாம்.

உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்கள் வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

ரத்த சோகை பிரச்சனைக்கு சிறந்த மருந்தாகும். ஏனெனில் வெல்லம் ரத்தத்தில் உள்ள இரும்பின் அளவை அதிகரிக்கும்.

உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள வெல்லம் பெரிதும் உதவியாக இருக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உடல் சோர்வு, படபடப்பு, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு வெல்லம் சிறந்த மருந்தாகும்.

ஆஸ்துமா நோயாளிகள் இரவு படுக்கும் முன் வெல்லத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் விலகும் மேலும் உணவுக்குழாயில் உள்ள கபத்தை வெளியேற்றும்.

Categories

Tech |