நடிகர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு மத்தியில் நடிகர் ரஜினி ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று முன்தினம் தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். ஆனால் அரசியல் பிரவேசம் குறித்து உறுதியான முடிவை ரஜினி தெரிவிக்கவில்லை.
அதனால் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று பலரும் கருத்துக் கூறினார்கள். இந்த நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் 2018 முதல் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு கஜா முதல் கொரோனா வரைக்கும் கடினமான களப்பணியாற்றி ஊருக்கு போக முடியாத சூழ்நிலையில் உள்ளேன். என்னுடைய குடும்பத்திற்கு என்ன பதில் சொல்ல தலைவரே, நீங்கள் அரசியலுக்கு வராவிட்டால் தற்கொலை செய்வேன் என்று ரஜினிக்கு அந்த ரசிகர் மிரட்டல் விடுத்துள்ளார்.