மழையிலும், சகதியிலும், வெள்ளத்தில் நீங்கள் என் வர வேண்டும் ? அங்கே இருந்துகொண்டு சொன்னால் போதாதா ? என முதல்வர் ஸ்டாலினிடம் பெண்கள் கூறினார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நான் ஒரு படி மேலே போய்கூட சொல்லுவேன், மழை வெள்ளத்திலே தமிழக முதல்வர் ஸ்டாலினை முழங்காலுக்கு மேலே தண்ணீரில் வருகின்றபோது, பார்க்கக் கூடிய இடங்களில் எல்லாம் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இந்த மழையிலும், இந்த சகதியிலும், இந்த வெள்ளத்தில் நீங்கள் என் வர வேண்டும் ?
நீங்கள் அங்கே இருந்துகொண்டு சொன்னால் போதாதா ? என்று உரிமை உணர்வோடு கேட்ட ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்று சொன்னால் தமிழ்நாட்டின் வரலாற்றில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் தளபதி தான் என்பதை எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும்.
அதே போல பொங்கலுக்கான பணம் கொடுக்கப்படவில்லை என்று எடப்பாடி சொல்லியிருக்கின்றார்கள். நீங்க எதற்காக பணம் கொடுத்தீர்கள் ? அதற்கு முன்னாடி 5 வருடம் ஆட்சியில் இருந்தபோது ஏன் பணம் கொடுக்கவில்லை. போன வருடம் தேர்தல் வரப்போகிறது என்பதற்காக நீங்கள் பொங்கலுக்கு கொடுத்தீர்கள்.
ஆனால் இந்த ஆட்சி அப்படி இல்லை, நாங்கள் சொல்வதை நிறைவேற்றி இருக்கிறோம்.ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண தொகையாக 4,000 வழங்கப்படும் என்று சொன்னோம், 4,000 நாங்கள் கொரோன நிவாரண தொகை முழுமையாக வழங்கியிருக்கிறோம். சொன்னதை நாங்கள் செய்திருக்கிறோம்.
இப்போது கூட பொங்கல் பரிசாக 19 பொருட்கள் அடங்கிய தரமாக பொருட்களை வழங்கியிருக்கிறோம் முழுமையாக… பொங்கலுக்காக ஒரு முழு கரும்பும் வழங்கக்கூடிய ஒரு ஆட்சியாக இன்றைக்கு இந்த ஆட்சி திகழ்கிறது. இவற்றை யெல்லாம்எடப்பாடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.