Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்க வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இத பண்ணுங்க…!!!

வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1, 2020 முதல் சிலகுறிப்பிட்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது.
மேலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையானவர்கள் புதிய ஒஎஸ் கொண்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் இது பலருக்கு கவலை தரும் செய்தியாக இருக்காது. எனினும், பழைய ஒஎஸ் கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோர் புதிய ஒஎஸ் கொண்ட சாதனங்களுக்கு அப்டேட் செய்வது நல்லது.

Categories

Tech |