Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நீங்க வீட்டிலிருந்தே போட்டுக்கொள்ளலாம்… அலுவலர்கள் மும்முர பணி… தேர்தல் அதிகாரி ஆய்வு..!!

பெரம்பலூரில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான முன்ன்னேற்பாடு பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11 ஆயிரத்து 699 முதியோர் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 64 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இதில் குன்னம் தொகுதியில் 294 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 538 முதியோர் வாக்காளர்களும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர். மேலும் பெரம்பலூர் தொகுதியில் 380 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 615 முதியோர் வாக்காளர்களும் என மொத்தம் 1,827 பேர் சட்டமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர்.

மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை அவர்கள் வீட்டிலிருந்தே தபால் ஓட்டு போடலாம். மாற்றுத்திறனாளி, முதியோர் வாக்காளர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கு அலுவலர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். தங்களது வாக்குகளை உரிய நாளில் செலுத்திட வேண்டும். மண்டல அலுவலர் அடங்கிய அலுவலர்கள் குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகபட்சமாக இரண்டு முறை, தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளர்களை அலுவலர்கள் சந்தித்து வாக்களிக்க வேண்டிய நடைமுறைகளை மேற்கொள்வார்கள். வீட்டிலிருந்து வாக்களிப்பதற்காக மாற்று திறனாளிகள், முதியோர்களுக்கு நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் தபால் ஓட்டு அனுப்புவதற்கான பணிகள் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தேர்தல் அதிகாரி ஸ்ரீ வெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Categories

Tech |