வாலிபர் ஒருவர் 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கியுள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள தாரகராம காலணியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே சொந்தமாக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. இதற்காக அவர் தினந்தோறும் ஒரு ரூபாய் நாணயங்களை சேர்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் பைக் வாங்க தேவையான பணம் சேர்ந்த உடனே பைக் ஷோரூம் ஊழியர்களை சந்தித்து அவர்களிடம் தனது பைக் ஆசையையும், ஒரு ரூபாய் மூட்டை பற்றியும் சொல்லி இருக்கிறார். இதனை கேட்ட ஊழியர்கள் முதலில் தயக்கம் காட்டியுள்ளனர்.
பின்னர் வெங்கடேஷ் அவர்களை சமாதானம் செய்து ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். இதனையடுத்து அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சேமித்த சில்லறைகளை கொண்டு வந்துள்ளார். இந்த சில்லறைகளை ஊழியர்கள் அரை நாள் முழுவதும் எண்ணியுள்ளனர். அதில் 2.5 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அதன்பின்னர் அந்த பணத்தை ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெங்கடேஷ் தனது பைக்கை வாங்கியுள்ளர்.