Categories
Tech டெக்னாலஜி

நீங்க ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா?…. அப்போ இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க….!!!!!

கம்மியான விலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் போதும் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் குறைந்தபட்சம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன்கூடிய மலிவான ஸ்மார்ட் போன் கூட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் உணர்வைத் தரும். புதுப்பிப்பு விகிதம் குறைவாக இருப்பின், நிறைய ஸ்மார்ட் போன் ஹேங்காவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கினால், அவற்றில் குறைந்தது 50 எம்பி கேமரா இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இதன் வாயிலாக சிறந்த புகைப்படம் எடுக்க இயலும்.

குறைவான திறனுடைய கேமராவால் அந்த புகைப்படம் அனுபவத்தை உங்களுக்கு வழங்கமுடியாது. குறைந்தபட்சம் 5000 mAh பேட்டரி உடைய ஸ்மார்ட்போனை மட்டும் வாங்குவது நல்லது. ஏனென்றால் நீங்கள் போனை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய தேவையில்லை. இந்த பேட்டரி எளிதாக 1-2 நாட்கள் வரை நீடிக்கும். நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்க விரும்பினால் குறைந்தபட்சம் அவற்றில் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளதா என பார்த்துவிட்டு வாங்குங்கள்.

ஏனெனில் இந்த டிஸ்ப்ளேயானது மிகவும் பிரகாசமானது ஆகும். எல்சிடி டிஸ்ப்ளே உடைய ஸ்மார்ட் போன் வாங்கினால், காட்சி அனுபவம் மிகவும் மந்தமாக இருக்கும். கேமிங்கின் அடிப்படையில் சிறந்த செயலியை எப்போதும் தேர்வுசெய்ய வேண்டும். ஸ்மார்ட் போன் எவ்வளவு மலிவானதாக இருப்பினும், செயலி மட்டும் நன்றாக இருக்கவேண்டும்.

Categories

Tech |