முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ரொம்ப நாளாக இருக்கிறது இப்ப கடந்த முறை நீர் திறந்ததில் தமிழக கலெக்டர் வரைக்கும் கலந்து கொள்ளவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கு இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
முதலில் சொல்லவில்லை, சொன்னால் தானே போக முடியும், அவர்கள் கூப்பிட்டா போக மாட்டாங்களா ? அது எங்க ஐயா வேணா சொல்லிட்டு இருப்பாரு, நமக்கு தெரிந்து தான் நடந்தது, தெரிஞ்சா ஏன் போகவில்லை. இதில் என்ன கொடுமை என்று தெரியுமா உங்களுக்கு ? பேபி அணையில் நீரைத் தேக்கி வைப்பதற்கு நமக்கு வாய்ப்பு இருக்கிறது.
அதற்கு என்னவென்றால் தூர் வாரவேண்டும், தூர்வாரி பராமரிப்பதற்கு மரங்கள் கொஞ்சம் இடையூறாக இருக்கிறது, அதில் சிலர் 3 மரம் என்கிறார்கள், சிலர் 19 மரம் என்கிறார்கள், சிலர் 29 மரம் எண்ணுகிறார்கள், மரங்களை அழிக்கக்கூடாது என்று நமக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த மரத்தை அழித்து விட்டால் கூட மறுபடியும் நட்டு வளர்க்க முடியும், அந்த மரத்தை வெட்டக்கூடாது என்று 40 வருஷமா கேரளா வந்து நமக்கு அனுமதி தராமல் இழுத்தடிக்கிறது, மரத்தை வெட்டக்கூடாது என்று சொல்லக்கூடிய கேரளா, கன்னியாகுமரியில் என் மலையை வெட்டி கொண்டு போயிருக்காங்க.
மரத்தை நான் நட்டு வச்சி என் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியும், நீரை நீங்கள் உறிஞ்சி எடுத்துக் கொண்டால் நான் தேக்கி வைத்துவிட்டு போக முடியும், இந்த மாதிரி பெருவெள்ளம் வந்தால் அதை தேக்கி வைத்து கொடுக்க முடியும். மலையை நான் எப்படி உருவாக்க முடியும், எப்படிப்பட்ட செயல்பாடுகள் ? இந்த மரத்தை வெட்ட அனுமதி தராத ஒரு மாநிலத்திற்கு நீங்கள் எப்படி இந்த மலைகளை வெட்டி கொண்ட போகறதுக்கு, அதானி துறைமுகத்துக்கு தான் போகுது.
தெரிந்து ஒரு கேள்வியும் கேட்கலையே, நீங்கள் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்கிறார்கள், உடைந்து விடும் என்கிறார்கள், வாங்க அங்குள்ள ஒரு பெரிய அணை கட்டுவோம் நீங்க 500 கோடி கொடுங்க, நாங்க 500 கோடி கொடுக்கிறோம், இரண்டு பேரும் சேர்ந்து பெரிய அணை கட்டுவோம். இந்த அணையை இடிக்க வேண்டியது இல்லை, எப்ப விழுகிறதோ விழுந்துட்டு போகட்டும், அந்த அணையை பயன்படுத்துவோம். அதுக்கு வர சொல்லுங்கள், அது வரமாட்டார்கள் என தெரிவித்தார்.