தனிநபரின் தகவல்கள் செல்போனில் உள்ள செயலிகள் மூலமாக திருடப்படுவதால் அந்த செயலிகளின் பட்டியலை அட்வான்ஸ்ட் செக்யூரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் செல்போன் மூலமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அனைவரும் தங்கள் பொழுதுபோக்கு விளையாட்டுகளை செல்போன் மூலமாக தான் விளையாடுகிறார்கள். அதிலும் சில விளையாட்டுகள் மிக ஆபத்தானவை. அதற்காக நாம் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளோம். அதிலும் சில செயலிகள் மூலமாக தனிநபரின் தகவல்கள் திருடப்படுகின்றன.
இந்நிலையில் அவாஸ்ட் செக்யூரிட்டி நிறுவனம் தனிநபர்களின் தகவல் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை திருடும் 7 புதிய செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்திகள் குறிப்பாக ஆன்லைன் கேம் விளையாடுபவர்களின் தகவல்களை எளிதாக திருடுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த செயலிகள் – Skins, Mods, Maps for Minecraft PE, Skins for Roblox, Live Wallpapers HD Background, 3D Background, Master Craft For MineCraft, Master For MineCraft, Boys and Girls Skins, Maps Skins and Mode for Minecraft ஆகும்.