பாசி படர்ந்து காணப்படும் சாய்வு தளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காந்திமதி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட ஷவரில் யானையை பாகன்கள் குளிப்பாட்டினார். இந்நிலையில் தண்ணீரில் மூழ்கி குளிப்பதற்கு வசதியாக கோவில் வளாகத்திலேயே ரூபாய் 10 லட்சம் செலவில் வசந்த மண்டபத்தில் நீச்சல்குளம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்திற்குள் யானை இறங்குவதற்கு வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டது.
தற்போது அந்த சாய்வு தளத்தில் பாசி படர்ந்து காணப்படுவதால் நீச்சல் குளத்திற்குள் சென்றுவர யானை சிரமப்படுகிறது. எனவே பாசி படர்ந்து காணப்படும் சாய்வு தளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பணிகள் நிறைவடைந்ததும் யானை சாய்வு தளத்தில் இறங்கி குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.