நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளம்பெண்ணின் காதில் நண்டு புகுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரீபியன் தீவுகளில் puerto Rico என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் இளம்பெண் ஒருவர் கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது காதில் சிறிய அளவிலுள்ள நண்டு ஒன்று எதிர்பாராத நேரத்தில் புகுந்தது. இதனால் அந்த பெண் வலியில் அலறி துடித்துள்ளார். இதனை கண்டு அருகிலிருந்த ஒருவர் இடுக்கி போன்ற சிறிய கருவியின் மூலம் காதில் புகுந்த நண்டை சுலபமாக பிடித்து வெளியே இழுத்தார்.
அந்த கம்பியில் சிக்கிய சிறிய நண்டு காதில் இருந்து வெளியே வந்து துள்ளிக் குதித்து ஓடியது. மேலும் இந்தக் காட்சியானது வீடியோ மூலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.