Categories
உலக செய்திகள்

நீடிக்கும் உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி!… இயற்கை எரிவாயு நெருக்கடி…. எதிர்கொள்ளும் பிரபல நாடு…..!!!!

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலியால் சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிப்பொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்திருக்கும் நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார நாடாக திகழும் ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் பல நாடுகளுக்கான எரிப்பொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்த பிறகு, குளிர்காலத்திற்கான சேமிப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜெர்மனியில் தொழில் துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்ற வாரம் முதல் உக்ரைன் போர் எதிரொலியால் எரிப்பொருட்களின் விலைகள் அதிகரித்து, இயற்கை எரிவாயு சப்ளையை ரஷ்யா குறைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் எரிப்பொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிறநாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகிறது. இது ஐரோப்பாவில் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. நம்மால் இன்னும் உணரமுடியாவிட்டாலும், நாம் தற்போது எரிவாயு நெருக்கடியில் இருக்கிறோம் என்று அந்நாட்டின் ஆற்றல் துறை மந்திரி ராபர்ட்ஹாபெக் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |