Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீடிக்கும் குற்ற செயல்கள்…. இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

இரண்டு குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்திலுள்ள தாதகாப்பட்டி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சங்கர் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் சென்ற அரவிந்த் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 2 ஆயிரம் ரூபாயை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அண்ணாமலை, சங்கர் பாண்டியன், குமார் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேர் மீது ஏற்கனவே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் சங்கர் மற்றும் அண்ணாமலை ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதில் குமார் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரும் கடந்த வாரம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |