உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் இராணுவ நடவடிக்கையால் அந்நாட்டிலிருந்து தற்போது வரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐநா தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் அதிக பலம் வாய்ந்த ராணுவ படைகள் உக்ரேன் மீது போர் தொடுத்து வருகிறது. இந்தப் போர் 6 ஆவது வாரமாக நீடித்து வருகிறது. இந்த போரினால் உணவு, உறைவிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளின்றி தவித்து வந்த அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள்.
அதன்படி தற்போது வரை உக்ரேனிலிருந்து ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையினால் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐநா அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.