இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் கீவ் நகருக்கு சென்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார்.
உக்ரைன், ரஷ்ய நாடுகளுக்கிடையேயான போர் 2 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கீவ் நகருக்கு சென்று உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவலை அதிபர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.